அத்திவரதர் திருவிழா இன்றுடன் தொங்கி 18 நாள்கள் ஆகி உள்ளது.இந்நிலையில் இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவித்தனர்.அத்திவரதரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் இன்று பக்தர்கள் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனால் குழந்தைகள் ,பெரியவர்கள் என 200 மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர்.இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் மயங்கி விழுந்த பக்தர்களுக்கு சிகிக்சையளிக்கப்பட்டு வருகிறது.
unknown nodeஅதேபோல இன்று அத்திவரதரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் காஞ்சிபுரம் – வாலாஜா சாலை வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் தாம்பரம் ,செங்கல்பட்டு இருந்து வரும் வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லமுடியாது நிலை ஏற்பட்டு உள்ளது.