காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார்.பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் பாதுகாப்பு , அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும் அத்திவரதர் வைபவம் குறித்தஅத்திகிரிஎன்ற புத்தகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட ஓபிஎஸ் பன்னீர்செல்வம் பெற்று கொண்டார்.