#BREAKING :தமிழகத்திற்கு இரண்டு புதிய மாவட்டங்கள்- முதல்வர் அறிவிப்பு !

இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக  முதலமைச்சர் எடப்பாடி  , தமிழக சட்டப்பேரவை விதி 110-கீழ் செங்கல்பட்டு , தென்காசி  புதிய மாவட்டங்களாக அறிவித்தார். நெல்லையில்

இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக  முதலமைச்சர் எடப்பாடி  , தமிழக சட்டப்பேரவை விதி 110-கீழ் செங்கல்பட்டு , தென்காசி  புதிய மாவட்டங்களாக அறிவித்தார். நெல்லையில் இருந்து தென்காசியையும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் பிரித்து புதிய இரண்டு மாவட்டங்களாக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்தார்.

தமிழகத்தில் ஏற்கனவே புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு ,தென்காசி இரண்டு புதிய மாவட்டங்களாக  அறிவிக்கப்பட்டதால் தற்போது தமிழகத்தில் 35 மாவட்டங்களாக மாறி உள்ளது.மேலும் புதிய இரண்டு மாவட்டங்களுக்கு இரண்டு ஐ .ஏ .எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்தார் .