குமரி அருகே மருந்து என நினைத்து விஷத்தை அருந்திய முதியவர் பலி...!!!

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (82). இவருக்கு ஆஸ்துமா தொல்லை இருந்து வந்த நிலையில் திடீரென மூச்சு திணறல்

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (82). இவருக்கு ஆஸ்துமா தொல்லை இருந்து வந்த நிலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  இவர் மருந்து குடிப்பதற்காக மருந்து பாட்டிலை தேடியுள்ளார். அந்த நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. அவர் தடவி தடவி  ஒரு மருந்து பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். அது வயலுக்கு தெளிக்க கூடிய போச்சி கொல்லி மருந்தாம்.

இதனையடுத்து இவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.