சேலத்தில் பிரச்சாரம் செய்து வந்த திமுக எம்பி பார்த்திபனுக்கு கொரோனா தொற்று!

DMK Lok Sabha member SR Parthiban, who was campaigning in Salem, has been diagnosed with corona infection.

சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரைவில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பல்வேறு இடங்களிலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி உள்ளனர். இந்நிலையில், தனது கட்சிக்கு ஆதரவாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்களும், மூத்த நிர்வாகிகளும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

தற்பொழுது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, பார்த்திபனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பார்த்திபன் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.