சிலிண்டர் வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

சேலத்தில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்வு.

சேலத்தில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்வு.

சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல்எரிவாயுசிலிண்டர்இன்று காலைவெடித்துவிபத்துஏற்பட்டுள்ளது.இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வீடு இடிந்து விழுந்ததில், மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.