சேலம் பகுதியில், வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இந்த நாய் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள அரசு மருத்துவமனையில், 50-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால், மருத்துவ மனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நாய் சாலையில் நடப்பவர்கள், நிற்பவர்கள் என அனைவரையும் விரட்டி விரட்டி கடித்துள்ளது. அந்த நாயை பிடிக்குமாறு மாநகராட்சியில் புகாரளித்த நிலையில் அவர்கள், நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து அப்பகுதி மக்களே திரண்டு அந்த நாயை அடித்து கொன்றுள்ளனர்.