#Breaking:சதய விழா:நாளை தஞ்சையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

School and college holidays in Thanjavur tomorrow ahead of Rajaraja Chola's 1036th Satya festival

ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை.

சோழ அரசர்களின் பெரும் புகழுக்குச் சொந்தக்காரரும்,மிகச் சிறந்த அரசர்களில் ஒருவருமான ராஜராஜசோழன் அவர்கள்,தஞ்சை பெரிய கோவில் என்னும் பேரதிசயத்தை கட்டினார்.இதன்மூலம்,ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவரது சிறப்பு ஓங்கி நிற்கிறது.இதன்காரணமாக, உலக அளவில் புகழ் மிக்கவராக மாறியுள்ளார்.இவரின் பிறந்த நாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,ராஜராஜசோழனின் 1036 வது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.