தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய சாபக்கேடான சாகுபுரம்DCW ஆலையின் பின்புறம் உள்ள புன்னக்காயல்கடல் பகுதியில் தான் அந்த ஆலையின் கழிவுகள் கலக்கப்படுகின்றது.
குறிப்பாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நல்ல மழை பொழிந்தது.இதனால் DCW ஆலையில் இருந்து வழக்கத்தை விட அதிக அளவு கழிவுகள் கடலில் கலக்கப்பட்டதாகஅங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.DCW ஆலை கழிவுகளுக்கும்,இன்று புன்னக்காயல் கடல் பகுதியில் டால்பின்கள் இறந்ததற்கும் ஆலையின் கழிவுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.