திருப்பூர்,திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர்கள் பேரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் காவிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (59). பனியன் ஏற்றுமதி நிறுவனம் மற்றும் ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள வங்கி கிளையில் கணக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ராமசாமி வங்கிக்கு சென்ற போது அவரது கணக்கில் ரூ. 3 கோடியே 92 லட்சத்து 78 ஆயிரத்து 768 ரூபாய் கடன் இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். தான் கடன் எதுவும் வாங்கவில்லை என அதிகாரிகளிடம் கூறினார்.
unknown nodeஇதே போல் திருப்பூர் அருள் புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் சிவபிரகாசம் என்பவரும் இதே வங்கியில் இருந்து ரூ. 6 கோடியே 12 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக வங்கியில் இருந்து தகவல் வந்தது. அவரும் வங்கியில் கடன் எதுவும் வாங்க வில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் ஹாரூண் ரஷித் என்பவர் இதே வங்கியில் ரூ. 5 கோடி கடன் கேட்டு உள்ளார்.அவருக்கு வங்கி நிர்வாகம் கடன் வழங்கி உள்ளது. ஆனால் ரூ. 5 கோடி கடனுக்கு ஹாரூண் ரஷித் ரூ. 8 கோடியே 34 லட்சம் கடன் பெற்றதாக வங்கியில் இருந்து தகவல் வந்துள்ளது.
unknown nodeஇந்நிலையில், ராமசாமி, சிவபிரகாசம், ஹாருண் ரஷித் ஆகியோர் இந்த மோசடி தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் கண்காணிபாளர் மனோகரனிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாநகர காவல் கண்காணிபாளர் உத்தரவிட்டார். விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது திருப்பூர் சிவசக்தி நகர் செந்தில் குமார் (35), அவரது மனைவி பிரியா (31) என்பது தெரிய வந்தது. மேலும், இவர்களுக்கு உடந்தையாக கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ராஜேஷ் கண்ணாவும் இருந்தது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் போலி ஆவணம் தயாரித்து பனியன் அதிபர்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கி உள்ளது தெரிய வந்தது. இந்த மோசடிக்கு வங்கி மேலாளர் சோமாயாஜி, உதவி பொது மேலாளர் அனந்த் நாயக், சீனியர் மேலாளர் சங்கர், துணை பொது மேலாளர் பத்மா ரெட்டி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மோசடி பணத்தில் 5 சதவிகிதம் வரை கமிஷன் பெற்று இருப்பதும் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
unknown nodeஇது தொடர்பாக வங்கி மேலாளர் சோமாயாஜியை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்தனர். போலி ஆவணம் தயாரித்து மோசடிக்கு உதவிய ராஜேஷ் கண்ணா தலைமறைவாகி விட்டார். இதற்கிடைய வங்கி அதிகாரிகள் ஆனந்த் நாயக், சங்கர், பத்மா ரெட்டி ஆகியோர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த சோமாயாஜி தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.
DINASUVADU