விருதுநகரில் ஜனவரி 17ல் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்ப்பு...!!

விருதுநகரில் வரும் ஜனவரி 17ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். சிலைத் திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர். விருதுநகர் மாவட்டம்

விருதுநகரில் வரும் ஜனவரி 17ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். சிலைத் திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக சங்கம் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் போஸ், வரும் ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆருக்கு திருவுருவ சிலை திறக்கப்படும் என்றும், இந்த விழாவில் முதலமைச்சர், துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.