Breaking:மழையால் 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை..!

வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. தஞ்சை பெரம்பலூர் சேலம் நெல்லை உட்பட தமிழகத்தின் பல்வேறு

வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. தஞ்சை பெரம்பலூர் சேலம் நெல்லை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில்  உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகப் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , சென்னை பொருத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.