JEE மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத் தேர்வு தேதி – மத்திய கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!

A major announcement by Union Education Minister Ramesh Pokhriyal on the date of the third and fourth phase examination of JEE

ஜே.இ.இ.(JEE) மூன்று மற்றும் நான்காம் கட்டத் தேர்வு நடைபெறும் தேதி குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜே.இ.இ.(JEE) மூன்றாம் கட்டத் தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரையும், நான்காம் கட்டத் தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையும் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“ஜே.இ.இ.யின் மூன்றாம் கட்டத் தேர்வுக்கு பதிவு செய்யாதவர்கள் ஜூலை 6 முதல் 8 வரையும், நான்காம் கட்ட தேர்வுக்கு ஜூலை 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும்,மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் தேர்வு மையங்களை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றக்கூடிய வகையில் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது”,என்று அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக,நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் இரண்டாம் அலை காரணமாக,ஜே.இ.இ.பொறியியல் நுழைவுத் தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.மேலும்,மே அமர்வு தேர்வு மே 24, 25, 26, 27, மற்றும் 28, 2021 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node