#Breaking: +2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

Chief Minister Stalin has announced a system for awarding +2 marks.

+2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்  சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து,மாநில பாடத்திட்ட சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் நடைபெற்ற நிலையில், 12-ம் வகுப்பு மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்,+2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து,தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அறிவிப்பின் படி,

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத்து முறையில் பெற்ற 20 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30% மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த மதிப்பெண்கள் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று மாணவர்கள் கருதினால்,அவர்களுக்கு தனித் தேர்வு நடத்தப்படும்,விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node