கொரோனாவால் தாமதமான டி.என்.பி.எஸ்.சி நேர்முக தேர்வு நாளை தொடக்கம்!

Chief Minister Stalin is visiting Thiruvarur today for the first time since taking over as Chief Minister.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமாகிய டி.என்.பி.எஸ்.சி நேர்முக தேர்வு நாளை தொடங்குகிறது.

பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2020ம் ஆண்டுக்கான துறை தேர்வுகள் நடைபெற்றது. இதனை அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நேர்முக தேர்வு கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஆகிய நிலையில், தற்போது இந்த தேர்வுகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி நாகர்கோவில் மற்றும் நெல்லையை சேர்ந்தவர்களுக்கு நாகர்கோவில் மையத்திலும், 9 ஆம் தேதி மதுரை, அரியலூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தூத்துக்குடி, பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு மதுரை மையத்திலும் நடைபெறுகிறது.

12, 13 ஆம் தேதிகளில் கோவை, ஊட்டி, ஈரோடு, கரூர், சேலம், திருப்பூர், நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கோவை மையத்திலும், 15 ஆம் தேதி கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி பகுதியை சேர்ந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி மையத்திலும், 16 ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, கடலூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலூர் மையத்திலும், 17 ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு திருவள்ளூர் மையத்திலும், 26,27 ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு சென்னை மையத்திலும் நடைபெறுகிறது.

குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.