குட்நியூஸ்..20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு..!

Good news..Special opportunity for students who have had Ariyar for 20 years- Anna University important announcement ..!

2001-2002 முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதாவது,2001-2002 கல்வியாண்டு (3 வது செமஸ்டர்) முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி,இன்று முதல்https://coe1.annauniv.edu/home/என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

unknown node
குட்நியூஸ்..20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு..!