செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளநீட் தேர்வுக்கானஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும், 12 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 198 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வு, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வு எழுதக் கூடிய நபர்கள் தங்கள் தேர்வு மையம் குறித்த தகவல்களைhttps://neet.nta.nic.inஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தற்பொழுதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்http://neet.nta.nic.inஎனும் இணையதளத்திலும், செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டைnbe.edu.inஎனும் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.