#Breaking:"நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது" – நீதிபதி ஏ.கே.ராஜன்...!

Judge AK Rajan told reporters that students affected by the NEET exam

சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில்,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம்,நீட் தேர்வால் பாதிப்புள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்துள்ளனர் என்று நீதிபதி ஏ.கே.இராஜன் கூறினார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில்,8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

இதனையடுத்து,நீட் தேர்வின் தாக்கம் தொடர்பாக,சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில்,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில்,கல்வியாளர் ஜவஹர், பள்ளிக்கல்வி செயலாளர் காகர்லா உஷா,ரவீந்திரநாத்,சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார்,மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும்,இக்கூட்டத்தில்,நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில்,கூட்டம் முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே.இராஜன்,”நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்து உள்ளனர்.மேலும்,நீட் தேர்வின் தாக்கம் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம்.

எனவே,வருகின்ற 21 ஆம் தேதி நடைபெறவுள்ள 2-வது கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்”,என்று கூறினார்.