ராகேஷ் ஷர்மாவிண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ஆவர்.
இவரது பிறந்த தினத்தில் இவரை நினைவு இவரை நினைவுகொள்வோம்.
பிறப்பு:
இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா எனும் பகிதியில், ஜனவரி மாதம் 13ம் நாள் 1949 ஆண்டு பிறந்தவர். உலக அளவில், ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதர் ஆவார்.
unknown nodeஇவர்,விண்வெளியில் 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி:
ஜனவரி 13ம் நாள் 1949 ஆண்டு பஞ்சாபில் பிறந்து இருந்தாலும் தனது பள்ளிப் படிப்பை ஆந்திர பிரதேசம், ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் இந்திய தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார்.பின் இவர் 1970 ஆண்டுமுதல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். பின் மீண்டும் 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
விண்வெளி பயணம்:
பின் விண்வெளிப் பயணத்திற்கு ராகேஷ் சர்மா 1982ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. தகுந்த பயிற்ச்சிகளுக்கு பின் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 அன்று ராகேஷ் சர்மா விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.
unknown nodeஅவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 என்ற விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். பின் இவர்கள் சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதர் ஆவார். இவர்,விண்வெளியில் 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்ற விருதுகள்:
பின் புவிக்கு திரும்பிய ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி இந்திய அரசின் உயரிய விருதகளில் ஒன்றான அசோகா சக்ரா விருது கொடுக்கப்பட்டது.
unknown nodeமேலும் இவர், சோவியத் ரஷ்யாவின் நாயகன் மற்றும் ஆர்டர் ஆப் தி லெனின் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.