தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், எதை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நாளை பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தேர்வு எழுதும் மாணவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு பதட்டமான சூழல் காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில் தற்போது தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பயம்,பதற்றத்தை அகற்ற வேண்டும்
பொதுத்தேர்வை முறையாக எதிர்கொள்வதற்கு உடல்நலமும் மனநலமும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமாகும். முதலில் மாணவர்கள் தேர்வு குறித்த அச்சத்தையும், பதற்றத்தையும் அகற்ற வேண்டும். எப்போதும் போல இயல்பு நிலையில் இருந்தால் தான் தேர்வை முறையாக எதிர்கொள்ள முடியும். தேர்வு குறித்த பதற்றத்தையும் பயத்தையும் அகற்றி நம்மால் முடியும் என்ற மன உறுதியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் கவனத்திற்கு
தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு முந்தைய நாள் புத்தகத்திலேயே தங்களது நேரத்தை செலவிடுவார். இந்த சமயங்களில் பெற்றோர் குழந்தைகள் மீது சற்று அக்கறை காட்ட வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கு மன உறுதியை அளிக்க தக்க வார்த்தைகளை அவர்களிடம் கூற வேண்டும்.
உணவு
தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக உணவை தவிர்ப்பது நல்லதல்ல. அதிலும், காலையில் தேர்வெழுத செல்லும் போது, காலை உணவை தவிர்க்க கூடாது. காலையில், எளிதில் செரிக்க கூடிய இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். பூரி, புரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இரவு நேர படிப்பு
தேர்வுக் ஆயத்தமாகும் மாணவர்கள் பலர் இரவு நேரங்களில் துங்காமல் படிப்பதுண்டு. அவ்வாறு படிக்கும் மாணவர்கள் தூக்கம் வராமல் இருப்பதற்காக டீ, காபி போன்றவற்றை குடிப்பர். ஆனால் இது தவறான ஒன்று. இதற்கு பதிலாக சூடான பால் அல்லது லெமன் டீ பருகுவது நல்லது. காலையில் தேர்வு எழுத செல்வதற்கு முன்பாக எலுமிச்சை பழச்சாறு, காய்கறி சூப், கீரை சூப் போன்றவற்றை உட்கொள்ளலாம். முடிந்தவரை அதிகமாக தண்ணீர் அருந்துவது நல்லது.
தேர்வுக்கு தேவையான பொருட்கள்
தேர்வுக்குத் தேவையான பொருட்களை தேர்வு எழுதப்போகும் அன்று காலையில் எடுத்து வைப்பதை தவிர்த்து, முதல் நாள் இரவே தேர்வுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைப்பது மிகவும் சிறந்தது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…