கொத்தமல்லி தொக்கு இப்படி செய்ங்க.. ஒரு வாரம் ஆனாலும் கெடாது.!

கொத்தமல்லி- கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

coriander thokku

கொத்தமல்லி-கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி இலைகள் =1 கட்டு

சின்ன வெங்காயம் =25

பெருங்காயம் =1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் =1 ஸ்பூன்

மல்லி தூள் =1 ஸ்பூன்

புளி =எலுமிச்சை அளவு

நல்லண்ணெய் =8 ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் புளியும் பெருங்காயமும் சேர்த்து கிளறி விடவும் .

பிறகு மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை கிளறிவிட்டு அதிலே கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகள் ஓரளவுக்கு வதங்கினால் போதுமானது. பிறகு அதை ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்கவே கூடாது.

மீண்டும் மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில்  அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறவும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு  மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.

பின் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்  . இப்போது சுவையான கம கமவென  கொத்தமல்லி தொக்கு தயார். இது ஆறிய  பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் சேகரித்து வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும். இட்லி தோசை சாதத்திற்கு மிக சுவையாக இருக்கும்.