உங்க வீட்ல இட்லி மாவு இருக்கா...? அப்ப அட்டகாசமான இந்த ரெசிபியை செய்து பாருங்க...!

இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை உணவு என்றாலே, இட்லி, தோசையை தான் செய்து சாப்பிடுவது. இட்லி மாவு பயன்படுத்தி வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது

இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை உணவு என்றாலே, இட்லி, தோசையை தான் செய்து சாப்பிடுவது. இட்லி மாவு பயன்படுத்தி வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை உணவு என்றாலே, இட்லி, தோசையை தான் செய்து சாப்பிடுவது. தற்போது இந்த பதிவில், இட்லி மாவு பயன்படுத்தி வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

இட்லி மாவு – 2 கப்

வெங்காயம் – 1

கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

கொத்தமல்லி – சிறிதளவு

ரவை – கால் கப்

அரிசி மாவு – கால் கப்

சீரகம் – சிறிதளவு

உப்பு – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுள், வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், ரவை, அரிசி மாவு ஆகியவவற்றை கெட்டியாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் பிசைந்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிறு சிறு உருண்டைகளாக போட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான இட்லி மாவு வடை தயார்.