பெரும்பாலும் தென் இந்தியர்கள் அனைவருமே காலை உணவுக்கு இட்லி அல்லது தோசை தான் செய்து சாப்பிட்டு வருகிறார்கள். இந்த இட்லியை சாதாரணமாக எப்பொழுதும் போல செய்து சாப்பிடுவதை விட, சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். குறிப்பாக இட்லி 65 செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த இட்லியை வைத்து எப்படி 65 செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
இட்லி
மிளகாய் தூள்
பெருங்காயம்
உப்பு
தக்காளி
கடலை மாவு
சீரகம்
எண்ணெய்
இஞ்சி பூண்டு விழுது
செய்முறை
கலவை :முதலில் கடலை மாவு, மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தோய்த்து எடுத்து கொள்ளவும்.
பொரியல் :கடலை மாவு கலவையில் தோய்த்து எடுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
தாளிப்பு :பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். விழுது போல நன்கு வதங்கி வந்ததும் ,நாம் பொரித்து எடுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளை இதில் சேர்த்து நன்றாக கிளறி, மல்லித்தழை தூவி இறக்கி விடவும்.
அவ்வளவு தான் 2 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிட்டால் நாம் வீட்டிலேயே தயாரித்த இட்லி 65 அட்டகாசமாக இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடத் தூண்டும்.