சுவையான சேமியா அடை செய்வது எப்படி?

நாம் தினமும் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான சேமியா ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நாம் தினமும் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான சேமியா ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

சேமியா – ஒரு கப்

கெட்டியான தயிர் – ஒரு கப்

மைதா – 2 மேசைக்கரண்டி

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

இஞ்சி – ஒரு துண்டு

பச்சைமிளகாய் – 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் ஆடை செய்ய தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் சேமியாவில் தயிர் ஊற்றி கிளறி கால் மணி நேரம் ஊற விட வேண்டும். பின் அதில் மைதா மாவினை தூவி கிளற வேண்டும். பின் இதனுடன், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.

பின் தவாவை காய வைத்து சிறிது மாவை உருண்டையாக எடுத்து அடையாக தட்ட வேண்டும். சுற்றி எண்ணெய் ஊற்றி இரு புறமும் வெந்ததும் எடுக்க வேண்டும். இப்பொது சுவையான சேமியா ஆடை தயார்.