இரண்டு நிமிடத்தில் வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி...?

Come learn how to make marrow pepper fry in a different way.

வெண்டைக்காய் வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என எது செய்தாலுமே சுவை அருமையாக இருக்கும். சிலருக்கு வெண்டைக்காய் பிடிக்காது. ஆனால், பலர் வெண்டைக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வித்தியாசமான முறையில் வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய்

வெங்காயம்

மிளகு

பூண்டு

கடுகு

உப்பு

எண்ணெய்

செய்முறை

விழுது :முதலில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வெங்காயம், மிளகு, பூண்டு ஆகிய மூன்றையும் நன்றாக மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பொரியல் :கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும் வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டி, எண்ணெயில் போட்டு வதக்கவும்.

பெப்பர் ஃப்ரை :அதன் பின் வெண்டைக்காய் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மிளகு கலவையை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். நன்றாக வதங்கி வந்ததும் இறக்கிவிடவும்.  அவ்வளவு தான் அட்டகாசமான வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை தயார்.