அட்டகாசான கருவாட்டு வறுவல் செய்வது எப்படி?

கருவாடு குழம்பு வைத்தால் சட்டியே தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட சுவையான கருவாட்டு வறுவல் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

கருவாடு குழம்பு வைத்தால் சட்டியே தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட சுவையான கருவாட்டு வறுவல் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையானவை

கருவாடு

சின்ன வெங்காயம்

பூண்டு

காய்ந்த மிளகாய்

கறிவேப்பில்லை

மஞ்சள் தூள்

உப்பு

எண்ணெய்

செய்முறை

முதலில் கருவாட்டை நீரில் நன்றாக கழுவிவிட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். அவித்த கருவாட்டை முள் நீக்கி உரித்து வைத்துக்கொள்ளவும்.

அதனுடன்வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தனியாக அரைத்து வைத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு உதிர்த்து வைத்துள்ள கருவாட்டை அதனுடன் சேர்த்து குறைந்த தீயில் அடுப்பை வைத்து முறுகும் வரை வதக்கி எடுக்கவும். தற்போது அட்டகாசமான கருவாடு வறுவல் தயார்.