காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இல்லாமல் வித்தியாசமான முறையில் இன்று அவலை வைத்து புட்டு செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
அவல்
தேங்காய் துருவல்
ஏலக்காய் தூள்
நாட்டு சர்க்கரை
உப்பு
முந்திரி
நெய்
செய்முறை
அரைக்க :முதலில் அவலை கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் இதனை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
வேக வைத்தல் :பின் அரைத்து எடுத்துள்ள அவல் மாவில் உப்பு சேர்த்து நன்றாக கிளறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் இதனை மூடி வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
கலவை :நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து கொள்ளவும். வேக வைத்த பின்பு இந்த அவல் புட்டை நன்றாக உதிர்த்து தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் முந்திரியை தூவி கிளறி பரிமாறவும்.