பாகற்காயில் மொறு மொறுவான மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.?

Let's see today how to make cantaloupe chips as an evening snack. The ingredients and recipe are given below.

பாகற்காயில் மாலை நேர ஸ்நாக்ஸான பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

சூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் இல்லையென்றால் நன்றாக இருக்காது .அந்த வகையில் இன்று மாலை நேர ஸ்நாக்ஸ் என்னவென்றால் பாகற்காய் சிப்ஸ் தான் .அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பெரிய பாகற்காய் – 4

நசுக்கிய பூண்டு – 1 மேஜைக்கரண்டி

பெருங்காயத்தூள் – 1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 மேஜைக்கரண்டி

அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி

மிளகாய்த்தூள் – 2 மேஜைக்கரண்டி

தயிர் – 2 மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

பாகற்காயில் உள்ள கசப்பை மாற்றுவதற்காக அதனை வட்ட வட்டமாக முதலில் நறுக்கி வைக்கவும்.அதன் பின் நறுக்கி வைத்துள்ள பாகற்காயில் மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தயிர் சேர்த்து கலந்து ஊற வைக்கவும் . அடுத்து 15 நிமிடங்களுக்கு பிறகு ஊற வைத்த பாகற்காயை நன்கு தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.அதன் பின் பாகற்காயில் உள்ள நீர் போகும் அளவிற்கு வடிகட்ட வேண்டும்.

அதன்பின் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், நசுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீரை வடிகட்டிய பாகற்காயுடன் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.

பின் ஒரு கடாயை எடுத்து அதனை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கிய பின்னர் பிசைந்து வைத்துள்ள பாகற்காயை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.தற்போது சுவையான மொரு மொருவான பாகற்காய் சிப்ஸ் தயார் .