சுவையான பருப்பு இட்லி செய்வது எப்படி?

நாம் தினமும் காலையில், இடலு, தோசை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நாம் தினமும் காலையில், இடலு, தோசை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

புழுங்கல் அரிசி – 2 கப்

துவரம் பருப்பு – அரை கப்

கடலை பருப்பு – அரை கப்

உளுந்தம் பருப்பு – அரை கப்

பாசிப்பருப்பு – அரை கப்

வெந்தயம் – 2 மேசைக்கரண்டி

தயிர் – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் தேவையான அணைத்து பொருட்காளையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெந்தயத்தை உளுந்துடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

அனைத்தும் ஊறியதும் தனித்தனியாக அரைத்தெடுத்து. ஒன்றாக சேர்த்து உப்பு மற்றும் தயிர் சேர்த்து பதமாக கலந்து வைக்க வேண்டும். பின் இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி, 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான பருப்பு இட்லி தயார்.