சத்தான நெய் தோசை செய்வது எப்படி?

நமது வீடுகளில் காலை உணவாக தோசை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான நெய் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நமது வீடுகளில் காலை உணவாக தோசை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான நெய் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

புழுங்கல் அரிசி – அரை கிலோ

பச்சரிசி – 200 கிராம்

உளுந்து – 150 கிராம்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து நன்கு கழுவி தனித்தனியாக  அரைத்து, ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு போட்டு குறைந்தது 10 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.

மாவு புளித்தவுடன் தோசை கல்லை சசூடாக்கி, எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு எடுத்து, மெல்லியதாக வார்க்க வேண்டும். பின் தோசையை சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்தவுடன், நெய் விட்டு மடித்து சூடாக பரிமாற வேண்டும். இப்பொது சுவையான நெய் தோசை தயார்.