அசத்தலான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி?

In this post we will see how to make delicious eggplant fries that can be loved and eaten by young and old alike.

இந்த பதிவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறிகளை வைத்து உணவு செய்து சாப்பிடுவதுண்டு. காய்கறிகள் என்றாலே சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

கத்தரிக்காய் – கால் கிலோ

வெங்காயம் – 3

மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

தேங்காய் துருவல் – 1 கப்

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

பின் கத்தரிக்காயை போட்டு, உப்பு,  மிளகாய்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புளியை கெட்டியாக கரைத்து விட வேண்டும். பின் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்ததும், தேங்காயாய் துருவலை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும்.  இப்பொது சுவையான கத்தரிக்காய் பொரியல் தயார்.