சுவையான கருணை கிழங்கு பக்கோடா செய்வது எப்படி?

கருணை கிழங்கில் கிழங்கில்  நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய  பல வகையான சத்துக்கள் உள்ளது.  தற்போது இந்த பதிவில் சுவையான கருணைக்கிழங்கு பக்கோடா செய்வது

கருணை கிழங்கில் கிழங்கில்  நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய  பல வகையான சத்துக்கள் உள்ளது.  தற்போது இந்த பதிவில் சுவையான கருணைக்கிழங்கு பக்கோடா செய்வது எப்படி என்று பாப்போம்.

தேவையானவை

கருணைக் கிழங்கு – அரை கிலோ

கடலை மாவு – கால் கப்

சோள மாவு – 2 டீஸ்பூன்

அரிசி மாவு – ஒரு ஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

பூண்டு – 5

சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் கருணை கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவேண்டும். வேகவைத்த கிழங்கை தனியே எடுத்து வைக்க வேண்டும்.

பின் சீரகம் மற்றும் பூண்டை அரைத்து அதனுடன் மிளகாய் தூள் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து மசிய வேண்டும். இந்த கலவையில் நிறைய தண்ணீர் சேர்க்கக் கூடாது. தயாரித்த கலவையுடன் வேக வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து கலந்து, சிறிது நேரம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான கருணை கிழங்கு பக்கோடா தயார்.