நாக்கில் வைத்ததும் கரையும் ரவை கேசரி இனி இப்படி செஞ்சு பாருங்க!

The semolina saffron that melts when put on the tongue no longer looks red like this, fifth minute easily at home.

வீட்டிலேயே அட்டகாசமான முறையில் ஈசியாக ஐந்தே நிமிடத்தில் ரவை கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

ரவை

சர்க்கரை

ஏலக்காய்

நெய்

முந்திரி

கேசரி தூள்

செய்முறை

முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் பழங்களை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்க்கவும். நன்றாக நெய்யில் ரவையை வறுத்து எடுத்த பின் ஒரு கப் ரவை எடுத்துக்கொண்டால் இரண்டரை கப் தண்ணீர் என்ற அளவுக்கு ஒரு சட்டியில் தண்ணீர் சேர்த்து அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து தண்ணீர் நன்கு கொதிக்க வைக்கவும்.

வறுத்து வைத்துள்ள கலவையை கொதிக்கும் நீருடன் கலந்து நன்றாக கிளறவும். லேசாக இறுகி வரும் நேரத்தில் சர்க்கரை முக்கால் கப் அளவிற்கு சேர்த்து அதன்பின் நெய்யை ஊற்றி நன்றாக கிளறி வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பிளம்ஸ் போட்டு கிளறி 2 நிமிடம் தம் கொடுத்து இறக்கினால் அட்டகாசமான ரவை கேசரி வீட்டிலேயே தயார்.