நமது உடலில் ஏற்படும் பல வகையான பிரச்சனைகளை போக்கும் திறன் மிகுந்த ஒரு பழம் பப்பாளி.இந்த பப்பாளி பழத்தை தினமும் உணவில் சேர்ந்து வந்தால் அது நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது.பப்பாளியின் மருத்துவ குணங்களை பற்றி நாம் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
எலும்புகள் வளர்ச்சி அடையும் :
unknown nodeபப்பாளியை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களின் உடல் வளர்ச்சி துரிதமாக இருக்கும்.மேலும் எலும்புகளும் நன்கு வளர்ச்சி அடையும். பற்களும் நன்கு உறுதியாக இருக்கும்.
உடல் எடை குறையும் :
unknown nodeபப்பாளிக்காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.
கல்லீரல் வீக்கம் :
unknown nodeபப்பாளியை உணவில் தினமும் சேர்த்து வந்தால் கல்லீரலில் உள்ள வீக்கங்கள் குறையும்.
முக சுருக்கம் :
unknown nodeபப்பாளியை நன்கு மசித்து தேனுடன் கலந்து முகத்தில் பூசி காய்ந்தபின் சூடு நீரால் கழுவி வந்தால் முக சுருக்கங்கள் நாளடைவில் மறைந்து முகம் அழகாக மாறும்.
வயிற்று பூச்சிகள் :
unknown nodeபப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து விடும்.
வாய்ப்புண் :
unknown nodeபப்பாளி பழத்தின் பாலை வாயில் புண்கள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் வாய் புண்கள் மறைந்து போகும்.
சேற்று புண்கள் :
unknown nodeபப்பாளி பாலை பசும் பாலுடன் கலந்து சேற்று புண்கள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் சேற்று புண்கள் ஆறும்.
தேள்கடி :
unknown nodeபப்பாளி விதையை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசி வந்தால் விஷம் படிப்படியாக இறங்கும்.