புங்கை மரத்தின் புதுமையான மருத்துவ குணங்கள் !

Pungai maram payangal [file image]

புங்கை மரம் -புங்கை மரம் அதிக அளவு ஆக்ஜிசனை தரக்கூடியது.புவி வெப்பமயமாதலை தடுக்க கூடியது மேலும் மண் அரிப்பை தடுக்க கூடியது , இப்படி பட்ட பல்வேறு நன்மைகளை கொண்ட புங்கை  மரம்  மருத்துவத்திற்கும் பயன்படுகிறது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் .

புங்கை மரத்தின் நன்மைகள் :

  • இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. இதன் இலைகளை புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. வீட்டுக்கு உள்ளே செல்லக்கூடிய நச்சுக்கிருமிகளை தடுக்கக் கூடியது.
  • ஆக்சிஜனை அதிக அளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்கமரம் தான். எந்த பகுதியிலும், எத்தகைய  சூழ்நிலைகளிலும் வளரக்கூடியது.
  • சாலை ஓரங்களில் நிழல் தரவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் பல வகையான மருத்துவ குணங்களை கொண்டது.

புங்கை மரப் பட்டையின் பயன்கள் :

புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இல்லை இவை மூன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.

மூல நோய் :

புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி1 டம்ளர்  குடித்து வர மூல நோய்  தீரும்.மேலும் புண்களுக்கு இதன் இலையை அரைத்து பற்றாக போட்டு வந்தால் விரைவில் ஆறும் .

புங்கை இலையின் பயன்கள் :

  • புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணை போக்கும் சக்தி உள்ளது. புங்கன்  இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுபுண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
  • புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டு காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும். புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்து காட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும்.
  • புங்க இலைகளுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால்  பசியின்மை, மாந்தம்  குணமாகும் . இருமல், சளி, வயிற்று போக்கு குணமாகும்.
  • புங்கன் இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் குளித்து வந்தால் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீழ் வாத நோய்கள் கட்டுப்படும். புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமாலுக்கு குறிப்பிட்ட அளவு குடிக்க கொடுக்க வேண்டும்.

புங்கை மர வேர் :

இதன் வேரை பொடி செய்து பற்களில் தேய்த்து வர ஈறுகளில் ரத்த கசிவு தடுக்கும் .

புங்கை மர பூ :

இதன் பூவை சேகரித்து நெயில் வதக்கி காயவைத்து  வெந்தயம் ,மஞ்சள்,மிளகு  ஆகியவற்றை தனி தனியாக  பொடித்து 300 ml  தண்ணீரில் 2 ஸ்பூன் புங்கை பூ ,2 ஸ்பூன் வெந்தய பொடி ,1/2 ஸ்பூன் மஞ்சள் ,1/2 ஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து 2 பங்காக பிரித்து வெறும் வயிற்றில்   காலை மாலை குடித்து  வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும் .

ஆகவே புங்கை மரத்தின் நன்மைகள் நம்மோடு சென்று விடாமல் நம் வருங்கால சந்ததியினருக்கும் கொண்டு சேர்ப்போம் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்