ஐந்தே பொருளை வைத்து அட்டகாசமான பிரியாணி செய்வது எப்படி?

நாம் பொதுவாக பிரியாணி செய்ய, அதற்க்கு ஏற்படும் செலவுகளை கண்டு சற்று தயங்குவதுண்டு. ஆனால் ஐந்தே பொருளை வைத்து அட்டகாசமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் பொதுவாக பிரியாணி செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதிகமான பொருட்கள் தேவைப்படும், இதற்கு பொருட்கள் அதிகமாக வாங்க வேண்டும், செலவு அதிகமாகும் என்று எண்ணி பலரும் பிரியாணி செய்வதை தவிர்ப்பது உண்டு. ஆனால் தற்போது இந்த பதிவில் ஐந்து பொருட்களை வைத்து அட்டகாசமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை
- மட்டன் – அரை கிலோ
- பாசுமதி அரிசி – அரை கிலோ
- பிரியாணி பிக்சர் தூள் – ஒரு பாக்கெட்
- தக்காளி – 150 கிராம்
- நெய் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதனுள் மட்டனை போட்டு வேக வைக்கவேண்டும். அதற்கிடையில் பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி இரண்டு முறை கழுவிய பின் சிறிது நேரம் அந்த தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். அதன்பின் நாம் வேக வைத்துள்ள மட்டனை தனியாக எடுத்து ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறைச்சியை வேக வைத்த தண்ணீரை வெளியில் ஊற்றக்கூடாது. அந்த தண்ணீரில் தான் பிரியாணி செய்ய வேண்டும். பின் ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, அதனுள் தக்காளி போட்டு வதக்க வேண்டும். பின்பு தக்காளி நன்கு மசிந்து வந்த பின் அதனுள் வேகவைத்து எடுத்து வைத்துள்ள மட்டன் இறைச்சியை போட்டு வதக்கவேண்டும். பின் பிரியாணி மிக்ஸர் பொடியை போட்டு நன்கு கிளற வேண்டும்.
அதன் பின் அதனுள் இறைச்சியை வேக வைத்த தண்ணீரை ஊற்றி, ஊற வைத்துள்ள அரிசியை வடித்து எடுத்து அதனுள் சேர்க்க வேண்டும். பின் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பின் திறந்து பார்த்தால் பாதி அளவு வெந்திருக்கும்.
அதன் பின்பாக ஒரு தவாவை வைத்து அதற்கு மேலாக நாம் பிரியாணி தயார் செய்துள்ள பாத்திரத்தை வைத்து, அப்பாத்திரத்தை காட்டன் துணியால் மூடி, மூடியை வைத்து மூட வேண்டும் அல்லது சாதாரண மூடியை வைத்து மூடினாலும் அதன் மேல் ஏதாவது பாரமான ஒரு பொருளை வைக்க வேண்டும்.இவ்வாறு வைத்து ஒரு பத்து நிமிடம் வேக விடவேண்டும். வெந்தவுடன் 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் அட்டகாசமான பிரியாணி தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025