garlic benefits [FILE IMAGE]
பூண்டு என்றாலே அதன் வாசனை மற்றும் காரத்தால் பலரும் ஒதுக்கி விடுகிறார்கள் ,ஆனால் இது ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் அளவிற்கு சத்தமே இல்லாமல் பல நோய்களை குணப்படுத்துகிறது .இதில் பலவகை பூண்டு உள்ளது, அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணமும் உள்ளது ஒரு சில பூண்டை சாப்பிடவே கூடாது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்..
இந்தப் பூண்டின் பள் மிகச் சிறிதாக இருக்கும் ஓரளவிற்கு வெள்ளையாக காணப்படும் .இது மற்ற பூண்டுகளை விட சற்று காரம் அதிகமாக இருக்கும் சளி மற்றும் வாயு பிரச்சனைகளுக்கு ஒரு பள்ளு பூண்டை நெருப்பில் சுட்டு அதை சாப்பிட்டு வர வாயு பிரச்சனை குணமாகும். மற்ற பூண்டுகளை விட இதன் விலை குறைவாகத்தான் இருக்கும்.
மலைப்பூண்டு
இந்த பூண்டின் பள் பெரிதாக இருக்கும். இதன் உள்புறத்தோல் ரோஸ் நிறத்தில் காணப்படும் உரிப்பதற்கு மிகவும் எளிதாக இருப்பதால் அதிக மக்கள் இதையே விரும்பி வாங்குவார்கள். இதன் காரமும் சற்று குறைவாகத்தான் இருக்கும் ஆனால் இதில் உள்ள சத்துக்கள் அதிகம் அதேபோல் விளையும் சற்று அதிகமாக இருக்கும்.
குளிர்காலத்தில் ஏற்படும் இதயப்பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்..?
சீனாவில் அதிக அளவு பூண்டு விளைவிக்கப்படுகிறது .பூண்டு விளையும் சமயங்களில் பூச்சிகள் தாக்காமல் இருக்க மெத்தில் ப்ரோமைடு என்ற மருந்து தெளிக்கப்படுகிறது இது வயிறு சம்பந்தப்பட்ட ஏற்படுத்தும், எனவே இந்த பூண்டை தவிர்ப்பது நல்லது. இது மிகவும் வெள்ளை நிறத்தில் காணப்படும் பூண்டின் அடிப்பகுதியில் வேர்கள் இருக்காது.
இது நாட்டுப்பூண்டு மற்றும் மலைப்பூண்டுகளை இரண்டு வாரங்கள் ரூம் டெம்பரேச்சரில் வைக்கப்படுகிறது, பிறகு இதன் உட்பகுதி கருப்பு நிறத்தில் மாறுகிறது இதில் தான் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. இந்த பூண்டு மாரடைப்பு மற்றும் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கிறது. ஆனால் இது அதிக அளவு கிடைப்பதில்லை.
என்னதான் பூண்டில் பலவகை நன்மைகள் இருந்தாலும் அதை நாம் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.
இந்த பூண்டில் உள்ள அல்லிசின் என்ற வேதிப்பொருள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது. அதனால் இதை நீண்ட நாள் நாம் வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தக் கூடாது நீண்ட நாள் வைத்திருக்கும் போது இந்த அல்லி சின் அளவு குறைந்துவிடும். இதனால் தேவையான அளவு மட்டும் வாங்கி பயன்படுத்தலாம்.
பாலில் இரண்டு மூன்று பூண்டுகளை இடித்து போட்டு கொதிக்க வைத்து குடித்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது பூண்டு சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியமாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் உள் நாக்கு பிரச்சனைகளுக்கு பூண்டு சாறை தேனுடன் கலந்து உள்நாக்கில் தடவி வரலாம் அல்லது விழுங்குவதற்கு கொடுக்கலாம் இவ்வாறு செய்யும்போது அதில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு உள்நாக்கின் வீக்கம் சரி செய்யப்படுகிறது.
குறட்டை விடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.? இதோ அதற்கான தீர்வு.!
மேலும் பூண்டிலிருந்து பல மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. எனவே தினமும் நாம் 3- 4 ப பூண்டை உணவில் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக்கொண்டு வந்தால் நம் உடலில் பல நோய்கள் சத்தமே இல்லாமல் குணமாகும்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…