குழந்தைகளுக்கு பிடித்த சுவையான இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் நமது குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட கொடுப்பதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையான இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
கோதுமை மாவு – 1 கப்
காய்ச்சிய பால் – 1 கப்
சீனி – அரை கப்
முட்டை – 1
உப்பு – சிறிதளவு
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பவுலில் காய்ச்சிய பால், கோதுமை மாவு, சீனி, முட்டை, உப்பு, ஏலக்காய் தூள் ஆகியவற்றை நன்கு கலந்து, தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, சூடேறியவுடன் ஒரு குண்டு கரண்டியில் அந்த மாவை ஊற்றி, ஊற்றி உருண்டையாக பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான இனிப்பு போண்டா தயார்.
