சாத்தான்குளம் விவகாரம்.! கைதான 3 போலீசாரும் நீதிபதி முன் ஆஜர்.!

சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர் முருகன்

சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார்  12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது.

இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட  3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடிவு செய்தனர். இதனால், 3 பேரையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு, மருத்துவ  பரிசோதனை நடத்தப்பட்டு நிலையில் தற்போது தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி முன்  ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர் முருகன் ஆகியோரை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தெடர்ந்து ரகு கணேஷ் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.