இறுதி ஊர்வலத்தில் 50 பேர் பங்கேற்கலாம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

மதுரையில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலகட்டத்தில் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார். ஏற்கனவே இறுதி ஊர்வலத்தில் 20 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட நிலையில், தமிழக அரசு மாற்றம் செய்து அரசானை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மதுரையில் இறுதி ஊர்வலத்தில் 50 வரை பங்கேற்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடித்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.