தமிழகத்தில் கடந்த 21 நாட்களில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஐ கடந்து பதிவான நிலையில், 2 நாட்களாக 100- க்கு கீழ் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,79,385 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,25,389 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறையத் தொடங்கியது. அந்தவகையில், இன்று 97 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,517 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 97 பேரில், தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
unknown nodeமேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 22 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 2,502 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 50 வயதிற்குட்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,581 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 376 பேரும், திருவள்ளூரில் 374 பேரும், மதுரையில் 335 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,535 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,982 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.