BREAKING: மருத்துவர், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு.! முதலமைச்சர் அறிவிப்பு .!

ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி  என அறிவிப்பு.

ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி  என அறிவிப்பு.

தமிழகத்தில்  நேற்று வரை கொரோனாவால்  1,755 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு  2 மாதம் பணி நீட்டிப்பு என  முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது புதியதாக  1,323 செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

unknown node

தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.