புரேவி புயல் காரணமாக சென்னை – தூத்துக்குடி விமான சேவை ரத்து!

Flights from Chennai to Thoothukudi have been canceled due to heavy rains in some places due to the storm,For precaution.

புரேவி புயல் காரணமாக சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்று புயலாக  உருவெடுத்து புரேவி என பெயரிடப்பட்டு கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் பாம்பனுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கில் 420கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடக்கு மற்றும் வடகிழக்கில் 600 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மன்னர் வளைகுடா கடல் வழியாக குமரிக்கடல் நோக்கி நகரும் என வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.