ரூ.20.20 கோடி மதிப்பில் மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்

ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று  முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு திட்டப் பணிகளையும் நேரடியாக பார்வையிட்டு திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முதலாவதாக முதலமைச்சர் பழனிசாமி கிருஷ்ணகிரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில்  ஒசூரில் ரூ.20.20 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்   பழனிசாமி.கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர்  பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.20.20 கோடி மதிப்பில் மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்