சென்னை அடையாறு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 4,549 பேர், தேனாம்பேட்டை- 4,334 பேர், கோடம்பாக்கம்- 3,801 பேர், அண்ணாநகர்- 3,636 பேர், திருவிக நகர்- 3,160 பேர், வளசரவாக்கம்- 1497 பேர்,திருவொற்றியூர்-1324 பேர், அம்பத்தூர் -1243 பேர், அடையாறு – 2,069 பேர், மாதவரம்- 955 பேர்,பெருங்குடி- 684 பேர், சோழிங்கநல்லூர்- 677 பேர், ஆலந்தூர்-736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.