தமிழகத்தில் 3,867 பேருக்கு கொரோனா.., 72 பேர் உயிரிழப்பு..!

In Tamil Nadu today, 3,867 people have been newly infected with the corona virus.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 3,867 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,867 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,96,287 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 222 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 72 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,005 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 4,382 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,27,988 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,57,791 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,34,80,699 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 35,294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

unknown node