#Breaking: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமடையும் கொரோனா.. ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனவால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனவால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 34,914 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 24, 545 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்தது. அதில் தனியார் மருத்துவமனையில் 6 பெரும், அரசு மருத்துவமனையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

unknown node

மேலும் இன்று, 60 மற்றும் 60 வயதுக்கு கீழ் 10 பேர் இன்று உயிரிழந்த நிலையில், 30, 39 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

unknown node
#Breaking: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமடையும் கொரோனா.. ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு!