சென்னையில் இன்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.கொரோனா பரவி வரும் சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தினந்தோறும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் தமிழகத்தில் 580 பேர் கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளனர் .தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5409 ஆக உயர்ந்துள்ளது.சென்னையை பொறுத்தவரை 316 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சென்னையில் 2644 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.