தமிழகத்தில் நேற்று மட்டும் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் மே 17ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4825ஆக உயர்ந்துள்ளது. இதில் 1516 பேர் கொரோனாவை எதிர்த்து போராடி குணமடைந்துள்ளனர்.
நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்தையடுத்து, மொத்த உயரிழந்தோரின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
unknown node