ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6951ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6951ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 5717 பேர், தேனாம்பேட்டை- 5534 பேர், கோடம்பாக்கம்- 5216 பேர், அண்ணாநகர்- 5260 பேர், திருவிக நகர்- 3981 பேர், வளசரவாக்கம்- 1957 பேர்,திருவொற்றியூர்-1787 பேர், அம்பத்தூர் -1859 பேர், அடையாறு – 2922  பேர், மாதவரம்- 1395 பேர்,பெருங்குடி-928  பேர், சோழிங்கநல்லூர்- 984 பேர், ஆலந்தூர்-1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.